வீட்டு ஓனரம்மா கை கால்களை கட்டிப்போட்டு காவலாளி செய்த கொடூர செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!securitymurdered house owner

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ரவி.  இவர், சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக உள்ளார். சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் ரவி வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி காவலாளியாகவும், வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை ரவி, அவரது மனைவி கலாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால்  நீண்டநேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரவி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தனது மனைவி கலா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவி வீட்டில் வேலை செய்துவந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை. கலாவின் கழுத்தில் கிடந்த நகையும் மாயமாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராகேஷ், வீட்டில் தனியாக இருந்த கலாவின் கை, கால்களை கட்டிப்போட்டு, அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, கலா கழுத்திலும், வீட்டின் பீரோவிலும் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்தநிலையில், தப்பி ஓடிய காவலாளி ராக்கேஷை போலீசார் தேடி வருகின்றனர்.