5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 17 வயது இளைஞர் கைது!School worker harassment to girl

ஆரணி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.

Arani

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் வேலை செய்யும் 17 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Arani

இதனையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ஏழுமலை என்ற இளைஞன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.