நெல்லை: தந்தையின் மரணம்.. கனத்த மனதுடன் தேர்வெழுதிய மாணவி.!



School Student Went exam after His Father Died 


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, இட்டமொழி, வடலிவிளை கிராமத்தில் வசித்து வருபவர் அய்யாதுரை (52). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவரின் மனைவி பானுமதி. தம்பதிகளுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர்.

18 வயதுடைய சிறுமி மதுமிதா, இட்டமொழியில் உள்ள ஏ.வி ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அய்யாதுரை, நேற்று அதிகாலை நேரத்தில் இயற்கை எய்தினார்.

school

அன்று மதுமிதாவுக்கு கணித தேர்வு இருந்தது. தந்தை உயிரிழந்த நிலையில், அவரின் உடல் இறுதிச்சடங்குக்காக வைக்கப்பட்டது. அப்போது, தந்தையின் உடலை கண்ணீருடன் வணங்கிவிட்டு சிறுமி மதுமிதா தேர்வெழுதி வந்தார்.

இதையும் படிங்க: பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்த்து விபத்து; 10 மாணவ-மாணவியர்கள் காயம்.!

கடந்த தமிழ் தேர்வின்போது வள்ளியூரைச் சேர்ந்த மாணவர் சுனில்குமாரின் தாய் சுபலட்சுமி உயிரிழந்த நிலையில், அவர் தாயின் இறுதிச்சடங்கை தேர்வெழுதிவிட்டு வந்து கவனித்தார். இதனிடையே, கணித தேர்வின்போது சிறுமி தனது தந்தையை இழந்தார். 

இதையும் படிங்க: படிப்பு சொல்லிக்கொடுத்த பள்ளியிலேயே கைவைத்த திருட்டு இளைஞர்கள்.. 2 பேர் கைது.!