என்ன விட்டுடு.. சொல்லியும் கேட்காமல் மிரட்டி, காதல் - பலாத்காரம்... 6 மாத கர்ப்பிணியாக சிறுமி.. பதறவைக்கும் துயரம்..!!

என்ன விட்டுடு.. சொல்லியும் கேட்காமல் மிரட்டி, காதல் - பலாத்காரம்... 6 மாத கர்ப்பிணியாக சிறுமி.. பதறவைக்கும் துயரம்..!!


school-student-pregnant-by-a-boy

17 வயதுடைய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து 6 மாத கர்ப்பிணியாக்கிய காமுகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அடுத்த மேலவீதி பகுதியில் ஒரு மாணவி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் வயது 17. தினமும் பள்ளி சென்று வரும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகனான இந்திரஜித் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், அதற்கு மாணவி மறுத்ததால் அந்த காமுகன், ஏதோ சத்தியவான் போல மாணவியை காதலிப்பதாக கூறி விடாமல் அவருடன் பழகி வந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து பலமுறை மிரட்டி காமுகன் இந்திரஜித், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

Karurஇதனால் மாணவி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். அத்துடன் இந்திரஜித் செய்த கொடுமைகளை மாணவி தன் தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த மாணவியின் தாய்,குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காமுகன் மீது புகார் அளித்துள்ளார். 

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி, இந்திரஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.