தமிழகம்

இன்றும் விடாது கொட்டித்தீர்க்கும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்த மாவட்ட ஆட்சியர்கள்!

Summary:

School leave for heavy rain

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் பெய்த மழையால், 9 மாவட்டங்களுக்கும் புதுவைக்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை விடப்பட்டது.

 இந்தநிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும் கடலூர், சிதம்பரம், வடலூர் போன்ற கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement