தமிழகம்

கஜா எதிரொலி: 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Summary:

school leave for gaja

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதி நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,  திருப்பூர், திருச்சி, மதுரை, அரியலூர், தேனி, விழுப்புரம் என 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
சேலம், விருதுநகர், தூத்துக்குடி, கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 16 ஆம் தேதி விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement