தனியார் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த பள்ளி வாகன ஓட்டுநர்!. விசாரணையில் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!.



school bus driver spoiled school girl

ஈரோடு மாவட்டம், வெள்ளிவலசு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 22-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, இதனையடுத்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின்பேரில் சிருமியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சிறுமி திருப்பூர் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார், அப்போது அதே வேனில் பள்ளிக்குச் சென்று வந்த சிறுமிக்கும் இளைஞர் விக்னேஷூக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

sexual abuse

மேலும் விக்னேஷ் சிறுமியிடம் ஆசைவார்த்தை பேசி சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை வீட்டை விட்டு ஓடி வரும் படி கூறியிருக்கிறார். அந்த சிறுமியும் விக்னேஷ் பேச்சை கேட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர்  விக்னேஷ் தன்னுடைய நண்பர்களான  ராஜபூபதி , ரமேஷ் இவர்களின் உதவியால் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.சிறுமியைச் சீரழித்த இளைஞர் விக்னேஷூக்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகளீர் காவல்நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் மீது ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.