பள்ளி பேருந்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போலீசார் அதிரடி நடவடிக்கை!School bus cleaner hy harassment to school girls

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி பேருந்திலேயே சென்று வருவது வழக்கம்.

chennai

இந்த நிலையில் பேருந்தில் செல்லும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக நசரத்பேட்டையை சேர்ந்த கிளினர் ஞானசேகரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர். அதன் பின்னர் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகளின் பெற்றோர் சார்பில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி பேருந்து வேன் கிளினர் ஞானசேகரன் கைது செய்து விசாரணை நடத்தினர்.

chennai

அந்த விசாரணையில் ஞானசேகரன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஞானசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.