பிச்சு எடுக்கபோகும் கனமழை.! 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு.!

பிச்சு எடுக்கபோகும் கனமழை.! 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு.!


school and college leave for rain

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து ஆறு, ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. 

இந்தநிலையில், மேலும் இன்று வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம், கடலூர், நாகப்பட்டினம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.