சிறையில் இருந்து விடுதலையாகிறாரா சசிகலா.? வெளியான தகவலால் படுகுஷியில் அமமுக-வினர்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

சிறையில் இருந்து விடுதலையாகிறாரா சசிகலா.? வெளியான தகவலால் படுகுஷியில் அமமுக-வினர்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் நெருங்கிய உதவியாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாக் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்த நிலையில், அவருக்கு சிறை தண்டையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

சிறையில் இருக்கும் சசிகலா அவர்களை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி விடுவிக்கப்படுவார் என்று சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள் நிலையில், பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பதிவில் இதை உறுதி செய்துள்ளார். மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo