அரசியல் தமிழகம்

சசிகலா டிஸ்சார்ஜ் ஆவதில் சிக்கல்.! திடீரென அதிகரித்த ரத்த அழுத்தம்.!

Summary:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா அவர்கள், பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் அவரது தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். ஆனாலும் உடல்நிலை கோளாறு காரணமாக தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வந்ததால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்கள் வரும் சனிக்கிழமை குணமடைந்து வீடுதிரும்பவிருந்த நிலையில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளதால், அவர் டிஸ்சார்ஜ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement