சென்னையை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி!

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி!



saloons-and-beauty-parlour-open-from-tomorow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல கடைகளும் மூடப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக சில தொழில்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், சலூன் கடைகள் திறக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவந்தது.  அதனால்  ஊரக பகுதிகளில் மட்டும் 19.5.2020 அன்று முதல் சலூன் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

chennai

மேலும் இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளையிலிருந்து காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கலாம். மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன்களை திறக்கக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களையும் பணி அமர்த்த கூடாது. 

சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களில் சமூகவிலகலை பின்பற்ற வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாரேனும் வந்தால் அவர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். அத்துடன் சலூன் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்துமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது என கூறியுள்ளார்.