14 வயது சிறுமியை கடத்தி, 4 நாட்களாக அடைத்துவைத்து பாலியல் தொல்லை: 22 வயது இளைஞர் தலைமறைவு.! 

14 வயது சிறுமியை கடத்தி, 4 நாட்களாக அடைத்துவைத்து பாலியல் தொல்லை: 22 வயது இளைஞர் தலைமறைவு.! 


salem-minor-girl-kidnapped

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன் (வயது 22). இதே பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். 

இவர் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று ஹரிஹரன் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தன்னுடன் அழைத்துசென்றுள்ளார். 

4 நாட்கள் சிறுமியை அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் உறவினர்கள், சேலம் நகர காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து, உடனடியாக வழக்கு சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்தனர். 

காவல் துறையினர் தன்னை கைது செய்திடுவார்கள் என்பதை அறிந்த ஹரிஹரன் தலைமறைவானதால், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.