வறுமையால் 3 குழந்தைகளை அரசு மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

வறுமையால் 3 குழந்தைகளை அரசு மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


salem-govt-hospital-baby

சேலம் அரசு மருத்துவமனையில் அக். மாதம் பெண் பிரசவத்திற்கு அனுமதி செய்யப்பட்டார். அந்த பெண்ணுக்கு கடந்த 20ம் பிரசவத்தின் போது 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் எடை குறைவாக இருந்துள்ளது. 

இளம்பெண்ணின் குடும்பத்தினர் வறுமையை சந்தித்து வந்த காரணத்தால், தங்களின் நிலையை மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Salem

குழந்தைகளுடைய அறிவுரை குறித்து மருத்துவமனை முதல்வர் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல அறிவுரை கூறியும் பலன் இல்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச்செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த நிலையில், இன்று 3 பெண் குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தைகளை சிறந்த முறையில் பராமரிக்க மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.