அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நிலப்பங்கீடு பிரச்சனையில் அண்ணியை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு, கொழுந்தன் தற்கொலை.!
சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தன், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் எடப்பாடி அருகே நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, முப்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன் (வயது 65). இவரின் மனைவி மாதேஸ்வரி (வயது 55)., இவர்கள் இருவருக்கும் கணபதி என்ற 35 வயது மகன் இருக்கிறார். கோவிந்தனின் தம்பி அண்ணாதுரை (வயது 60). இவரின் மனைவி இறந்துவிட்டார். அண்ணாதுரையின் மகன் கோபால். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.
கோவிந்தனுக்கும் - அண்ணாத்துரைக்கும் இடையே 40 சென்ட் அளவுள்ள விவசாய நிலத்தை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இதனால் அண்ணன் - தம்பியாக இருந்தாலும், இரு குடும்பத்தாரும் பேசாமல் சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 3 மணியளவில் பால் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அண்ணாதுரை கையில் அரிவாளுடன் வந்து அண்ணி மாதேஸ்வரியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாதேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறியோடினர்.
தனது சொந்த அண்ணனின் மனைவியான அண்ணியை கொலை செய்த அண்ணாதுரை, வீட்டிற்கு சென்று தென்னை மரத்திற்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கொலை தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி காவல் துறையினர், மாதேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனையாக்க அனுப்பி வைத்தனர்.
அண்ணாதுரையை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து, அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்று மயங்கி இருந்துள்ளார். அவரை மீட்டு எடப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அண்ணாதுரை உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து பாகம் பிரிப்பதில் அண்ணன் - தம்பி இடையே 10 வருடமாக பகை இருந்து வந்துள்ளது.
இருதரப்பும் அவ்வப்போது தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதியாக நடந்த தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அண்ணியை அண்ணாதுரை கொலை செய்துள்ளார். மேலும், வயதான காலத்தில் எதற்காக சிறையில் வாட வேண்டும் என்று நினைத்த அண்ணாதுரை, தென்னை மரத்திற்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.