"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" சகாயம் ஐ.ஏ.எஸ் திடீர் விருப்ப ஓய்வு.! சோகத்தில் இளைஞர்கள்.!

"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" சகாயம் ஐ.ஏ.எஸ் திடீர் விருப்ப ஓய்வு.! சோகத்தில் இளைஞர்கள்.!


sagayam-ias-aplied-vrs

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே சகாயம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்த சகாயம் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

'மக்கள் பாதை' என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் ஐ.ஏ.எஸ் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வருகிறார். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்.எஸ் கேட்டுள்ளார்.

sagayam ias

"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்பதை கொள்கையாக வைத்திருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ் முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இவரது விருப்ப ஓய்வு இளைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.