#Breakng: பெண்கள் கார் மறிக்கப்பட்ட விவகாரம்; கைதானவர்கள் அதிமுகவினர் - ஆர்.எஸ் பாரதி அடுக்கடுக்கு குற்றச்சாட்டு.! 



RS Bharathi on Muttukadu Girls Car Chasing Case 

 

சென்னை முட்டுக்காடு பகுதியில் கடந்த ஜன.25 அன்று நள்ளிரவு நேரத்தில், கடற்கரைக்கு சென்று இருந்த பெண்கள் காரில் துரத்தப்பட்டனர். இந்த விஷயம் குறித்த புகார்கள் 5 பேர் மொத்தமாக தற்போது வரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். காரில் வந்தவர்கள் திமுக கொடி கட்டி இருந்த நிலையில், எதிர்க்கட்சியான பாஜக, அதிமுக ஆகியவை கடும் கண்டன குரலை எழுப்பி இருந்தது. 

மேலும், திமுக கட்சியை சேர்ந்தவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் கூறி இருந்தனர். இந்த விஷயம் தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகர்.. புகாரை வாபஸ் பெற மிரட்டும் வடவள்ளி இன்ஸ்பெக்டர்.. பெண் குமுறல்.!

dmk

செய்றது நீங்க, புகார் எங்க மேலயா? 

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மேற்கூறிய முட்டுக்காடு விவகாரத்தில், கைது செய்யப்பட்டவர் இரும்புலியூர் அதிமுக உறுப்பினர் அவர். அதிமுகவினர் செய்யும் தவறுகளுக்கு திமுகவின் மீது பழிபோட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். காவல்துறையினர் பறிமுதல் செய்த கார், நீலகிரி அதிமுக செயலாளர் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. 

சமீபத்தில் படைப்பை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பொன்னம்பலம் என்பவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட பெண்களால் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், திமுகவினர் மீது குறை சொல்லுகிறார்கள். கட்சிக்கொடியை பயன்படுத்தி, தனது பேச்சால் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல பயன்படுத்தியதாக காவல்துறையினரிடம் கைதானவர் விளக்கமும் கொடுத்து இருக்கிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்தால் 15,000 ஐடி வேலை; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.!