தலையை வெட்டி, மூளையை தனியாக தட்டில் வைத்த கொலையாளிகள்!! துடிதுடிக்க இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்!! வெளியான பகீர் காரணம்!!

தலையை வெட்டி, மூளையை தனியாக தட்டில் வைத்த கொலையாளிகள்!! துடிதுடிக்க இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்!! வெளியான பகீர் காரணம்!!


rowdy-murder-by-unknown-person

திருவல்லிக்கேணி மாட்டான்குப்பம், கெனால் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் அறிவழகன். 24 வயது நிறைந்த இவர் வழிப்பறி, திருட்டு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் மேலும் இவர் மீது கொலை வழக்குகளும் உள்ளது. இவர் ரவுடி பல்புகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் அறிவழகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள் அறிவழகன் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது தப்பியோட முயற்சி செய்த அவரை சுற்றி வளைத்த இருவரும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதில்  அறிவழகன் ரத்தவெள்ளத்தில் சரிந்து. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அறிவழகன் உடல் முழுவதும் வெட்டிய அந்த நபர்கள் அவரது தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

          Murder

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு  தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அறிவழகனுக்கும்,  அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்பொழுது அறிவழகன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்துள்ளார்.  இதனால் கோபம் அடைந்த பெண்ணின் மகன்களுக்கும், அறிவழகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணின் மகன்களே இவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் சரியான குற்றவாளிகள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.