
rowdy attacked police
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி சுரங்கத்தில் காப்பரை திருடி வந்த கஞ்சா வியாபாரியை மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர் பிடிக்க செண்டபோது கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்த போது அங்கு வந்த கஞ்சா வியாபாரி மணி என்பவர் என்எல்சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு வீரர், மணியை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனை குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், காயமடைந்த செல்வேந்திரனை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தப்பியோடிய பெங்களூர் மணி மீது கஞ்சா உள்ளிட்ட திருட்டு வழக்குகளும், சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளான் என்பதும் தெரியவந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னை கைது செய்ய முடியுமா என போலீசாருக்கு பெங்களூர் மணி சவால் விட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பானது. இந்தநிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement