நான் குடிக்காத சரக்கு இல்ல! ஏறாத விமானம் இல்ல! எல்லாமே எக்ஸ்ட்ரீம் போய்டேன்! ரோபோ சங்கரின் வாழ்க்கை பேச்சு...



robo-shankar-last-video-trending

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனித்துவமான நகைச்சுவை, பல்திறமை, மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் ரோபோ சங்கர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் உலுக்கியுள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள், சக கலைஞர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஸ்டாண்ட் அப் காமெடியன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடு ரசிகர்களின் இதயத்தை வென்றார்.

பின்னர் தனுஷ் நடித்த *மாரி* திரைப்படத்தின் மூலம் முழுநேர நடிகராக களம் இறங்கி, முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.கடந்த வருடம் கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், அதன்பின் தீய பழக்கங்களை முற்றிலும் கைவிட்டார். தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும், நேற்று ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவர்களின் சிகிச்சைக்கு இணங்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில், ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிறது. அந்த வீடியோவில், “நான் குடிக்காத பாட்டிலே கிடையாது. 60 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சரக்குகளை குடித்திருக்கிறேன். அனைத்திலும் எக்ஸ்ட்ரீம் போய்விட்டு வந்துவிட்டேன். ஏறாத விமானம் இல்லை, பார்க்காத லக்சுரி கார் இல்லை. பல நாடுகள் சுற்றிவந்துவிட்டேன். இப்போது அவைகளை எல்லாம் உடைத்துவிட்டேன்” என்று அவர் கூறியிருந்தார்.46 வயதில் புகழின் உச்சியை எட்டிய நிலையில் திடீரென உயிரிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்! திரையுலகமே கவலையில்.....

அவரின் பழைய வீடியோவை பார்த்து, “அவருக்கு இன்னும் பல சாதனைகள் எட்டியிருக்க முடியும்” என்று ரசிகர்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்கு பெரும் துயரம்! ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!