பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்... நடிகை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!!



renowned-kannada-director-accuses-of-sexual-harrassment

பிரபல கன்னட திரைப்படமான ரிச்சி திரைப்படத்தை இயக்கிய ஹேமந்த் மீது அப்படத்தில் நடித்த நடிகை பாலியல்  ரீதியான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. ஆனால் அதைப் பற்றிய புகார் தற்போது தான் தெரிவிக்கபட்டுள்ளது.. இதன் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான ஹேமந்த் குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி 2022ம் ஆண்டு ரிச்சி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதில் புது முக நடிகையாக அறிமுகமான பெண்ணுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகியுள்ளார். பின்னர் படப்பிடிப்பு காலத்தில் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி விளம்பர படப்பிடிப்புக்காக மும்பைக்கு வருமாறு ஹேமந்த் அழைத்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்து குளிர்பானத்தில் மதுவை கலந்து தன்னை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து பின்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என அப்பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

Indiaஇதைப் பற்றி யாரிடமும் கூறினால் உனது சினிமா தொழிலுக்கே ஆபத்து வந்துவிடுமென மிரட்டினார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் இதனை பற்றி வெளியே கூறவில்லை என கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஐ.பி.சி 354, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமியிடம் தகாத இடங்களில் தொட்டு பாலியல் அத்துமீறிய 8 பெண்கள்! நீங்களே இப்படி செய்யலாமா? தாயின் கதறல்..

2023ம் ஆண்டு ஹேமந்த், நடிகை தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கன்னட பிலிம் சேம்பரில் புகாரளித்திருந்தார். அந்த புகாரை தொடர்ந்து ஃபிலிம் சென்டர் இருவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் நடிகை எந்தவிதமான பாலியல் பிரச்சனைகளையும் கூறவில்லை. ஆனால் இப்போது கூறியுள்ளது இதற்கான பின்னணியை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்கள் நடிகைக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளது. சிலர் எதிர் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஹேமந்த் தரப்பும் சட்ட ஆலோசகர்களின் மூலம் ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பெண்கள் நல அமைப்பு இந்த வழக்கில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். திரையுலகில் பல பெண்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்க கூடும் என்ற பயத்தாலே புகாரளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு மற்ற பெண்களுக்கு தைரியத்தை கொடுக்குமென பெண்கள் நல அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் அதிரடி கைது.! ஏன்? என்ன நடந்தது??