AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் அதிரடி கைது.! ஏன்? என்ன நடந்தது??
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து அவர் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.1000 கோடி கடன்
டெல்லியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவர் ரூ.1000 கோடி கடன் பெற முயற்சி செய்து வந்துள்ளார். இதை அறிந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அவருக்கு கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து கமிஷனாக ரூ.5 கோடியை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை தொடர்ந்து பவர் ஸ்டார் அவருக்கு கடனை பெற்றுக் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை அனுஷ்கா.! அட.. இதுதான் காரணமா?? பரவும் தகவல்!!

விசாரணைக்கு ஆஜராகாமல் எஸ்கேப்
இந்த நிலையில் தொழிலதிபர் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் பவர் ஸ்டார் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பவர் ஸ்டாரை கைது செய்துள்ளனர். பின் ஜாமீனில் வெளிவந்த அவர் 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு முறையாக ஆஜாரகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
இந்த நிலையில், பணமோசடிப் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்துள்ளனர். நடிகர் பவர் ஸ்டார் மீது சென்னையிலும் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை அனுஷ்கா.! அட.. இதுதான் காரணமா?? பரவும் தகவல்!!