தமிழகம் காதல் – உறவுகள்

இளம்பெண்ணை எரித்துவிட்டு பலே நாடகமாடிய உறவினர்கள்.! வெளியான சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி பின்னணி!!

Summary:

relatives killed girl for her illegal affairs

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி.வல்லக்குளம் பகுதியில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மகள் ராதிகா. 22 வயது நிறைந்த இவருக்கும் பார்த்திபனூர் அருகே வசித்து வந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதிகா கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராதிகாவிற்கு தனது  பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காலப் போக்கில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் ராதிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

 இந்நிலையில் சமீபத்தில் உடல் கருகிய நிலையில் ராதிகா தனது வீட்டிற்கு அருகேயுள்ள கண்மாயில் கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு  தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் ராதிகாவின் கள்ளக்காதலன் கருப்பசாமிதான் எனது மகளை கொன்றுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசிடம் நிதி உதவி கேட்டும் உடலை வாங்காமல் ராதிகாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களுக்கு அரசு நிவாரணமாக 8 லட்சத்து 25 ஆயிரம் அறிவித்திருந்தது மேலும் இதில் முதல் தவணையாக 4,12,500 ரூபாயை ஜோதிகாவின் குடும்பத்தினருக்கு அரசு அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் கருப்புசாமிதான் கொன்றார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார்கள் ராதிகாவை அவரது உறவினர்கள் தான் கொண்டுள்ளனர் என கண்டறிந்தனர்.

lovers க்கான பட முடிவு

அதாவது ராதிகா கருப்பசாமியுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவரது உறவினர் முருகன் அவரை கண்டித்துள்ளார். அப்பொழுது ராதிகா அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த முருகன் அவரது தாய் பாப்பா மற்றும்  சில உறவினர்கள் ராதிகாவை கடுமையாகத் தாக்கி கொன்று எரித்துள்ளனர்.மேலும் அரசு உதவி கிடைக்கும் என ராதிகாவின் தாயாரின் மனதை மாற்றி கருப்பசாமி மீது குற்றத்தை போட முயற்சி செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து நிரூபணமான நிலையில் முருகன், பாப்பா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement