சிவப்பு, ஆரஞ்சு, பச்சை.. வெளியானது புதிய பட்டியல்! தமிழகத்தில் ஒரேயொரு பச்சை மாவட்டம்!

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை.. வெளியானது புதிய பட்டியல்! தமிழகத்தில் ஒரேயொரு பச்சை மாவட்டம்!



red-orange-green-district-lists-of-tamilnadu

கொரோனா பரவலை பொறுத்து இந்தியாவில் உள்ள அணைத்து மாவட்டங்களும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் புதிய பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 40 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவலை மையப்படுத்தி நாடு முழுவதும் உள்ள 740 மாவட்டங்களை மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. இதனை பொறுத்து ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

red orange green

தற்போது அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 12 மாவட்டங்கள் சிகப்பு, 24 மாவட்டங்கள் ஆரஞ்சு, ஒரு மாவட்டம் பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டவரியிலான விவரங்கள்:

12 சிகப்பு:
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம்.

24 ஆரஞ்சு:
தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்பரம், கோவை, கடலூர், சேலம் கருர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி.

ஒரு பச்சை: கிருஷ்ணகிரி