மக்களே மகிழ்ச்சி செய்தி! நகைக்கடனில் RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.! மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!



rbi-gold-loan-guidelines-small-finance-banks

இந்தியாவில் தங்க நகை கடன்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய முடிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு நகைக்கடன் கிடைக்கும் வாய்ப்பு விரிவடைவதால், இந்த மாற்றம் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

நகை அடகு வைத்து பணம் பெறும் வழக்கில் மாற்றம்

அவசரத் தேவைகளில் பொதுவாக நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். அடகு வாயிலாக பெறும் கடனை வருடந்தோறும் புதுப்பிக்காத சூழலில், நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயமும் நிலவுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நகைக்கடன் விதிகளை மாற்றி வருகிறது.

இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை! சவரனுக்கு 88 ஆயிரத்தை தாண்டியது! இன்றைய தங்கம் விலை நிலவரம்...

ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கு RBI பச்சைக்கொடி

தங்க நகை கடன் வழங்கும் வசதியை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கு முழு அனுமதி அளித்துள்ளது. தனிநபர் கடன், வீட்டு கடன் மற்றும் வாகனக் கடன் வளர்ச்சி மந்தமாக இருக்கும் நிலையில், வங்கிகள் தங்க நகை கடன்களை குறைந்த வட்டியில் வழங்க முன்வந்துள்ளன.

தங்க நகை கடன் பாதுகாப்பானது என்பதால், இதுவரை இந்த சேவை இல்லாத கிராமப்புற கிளைகளிலும் இப்போது ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் நகைக்கடன் வழங்க முடியும். இது வங்கி துறையில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

கடன் பெறுவோருக்கு நன்மை

புதிய RBI அனுமதியின் மூலம் குறைந்த வட்டியில் தங்க கடன் பெற வாய்ப்பு அதிகரிப்பதால், சிறு தொழில் முனைவோருக்கும், கிராமப்புற மக்களுக்கும் பெரும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நகைக்கடன் மாற்றங்கள், வங்கிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் தங்க அடகு கடன்களின் வாய்ப்பை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன.