காவலரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து வழிப்பறி முயற்சி.. தலைமறைவு கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..!

காவலரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து வழிப்பறி முயற்சி.. தலைமறைவு கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..!


Ranipet Police Robbery Attempt with Pepper Spray

பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவர் சம்பவத்தன்று தனது பணியை முடித்துவிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நந்தியாலம் அருகே பழனிவேல் சென்றுகொண்டு இருக்கும்போது, அவரை இடைமறித்த கொள்ளையர்கள் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

Ranipet

அந்த சமயத்தில், காவல் உதவி ஆய்வாளர் தனது வாகனத்தில் இருந்த சைரனை ஒலிக்கவிட்டதால் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ரத்னகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.