பள்ளிமாணவர்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து.. உயிர்காத்த ஓட்டுநர்.. பதறிப்போன மாணவர்கள்..!

பள்ளிமாணவர்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து.. உயிர்காத்த ஓட்டுநர்.. பதறிப்போன மாணவர்கள்..!


ranipet college bus fire accident

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ஜோதிநகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான பேருந்தில், இன்று காலை நேரத்தில் சேர்ந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ஓட்டுனருடன் பயணம் செய்தனர். 

இந்த பேருந்து சேர்ந்தமங்கலம் இரயில்வே கேட் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனைகவனித்த பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் (வயது 31) பேருந்தை நிறுத்தி மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கிவிட்டுள்ளார். 

Ranipet

அவரும் வாகனத்தில் இருந்து அவசர கதியில் இறங்கிய நிலையில், பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து அரக்கோணம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் 30 நிமிடம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஆனால், பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக மாறிய நிலையில், தீ விபத்து குறித்து நெமிலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.