மசாஜ் சென்டருக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம்; நடந்தது என்ன?.. அரக்கோணத்தில் பகீர்.!Ranipet Arakkonam Massage Center Man Died Mystery 

 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகா, பல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 4 மாதமாக ஈரோடு அமாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகாந்த் (வயது 22) என்ற வாலிபர், மசாஜ் சென்டருக்கு வந்து மசாஜ் செய்துவிட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மசாஜ் சென்டரில் கிருஷ்ணகாந்த் திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல் துறையினர், கிருஷ்ணகாந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.