செம மாஸ்... சும்மா தெறிக்க விடும் வாத்தி டிரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
சௌமியாவை காதலித்து, வரதட்சணை, அழகை கேட்டு கைவிட்ட ஷேக் முகம்மது.. பெண் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை.!
சௌமியாவை காதலித்து, வரதட்சணை, அழகை கேட்டு கைவிட்ட ஷேக் முகம்மது.. பெண் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை.!

சௌமியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் செய்வதாக பேசி நெருங்கி வாழ்ந்த ஆசிரியர் ஷேக் முகம்மது, இறுதியில் பெண்ணை கைவிட்டதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓம்சக்தி நகர், பதினோராவது தெருவை சார்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சௌமியா (வயது 25). இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். மேலும், அரசுப்பணி தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார்.
இவரிடம், இராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஷேக் முகம்மது அபு (வயது 25) என்ற நபர் அறிமுகமாகி பழகி, பின்னாளில் செல்போன் எண்ணை வாங்கி பேசி வந்துள்ளார். இதன்போது, முகம்மது அபு சௌமியாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி நெருங்கி பழகி வந்துள்ளார்.
மேலும், சௌமியாவை தனது வீட்டிற்கும் வரவழைத்ததாக தெரியவருகிறது. இதன்பின்னர், ஷேக் முகம்மது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த சேஹக்கின் பெற்றோர்களும், பின்னாளில் சௌமியா அழகாக இல்லை, வரதட்சணை வேண்டும் என கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த சௌமியா, நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து, சௌமியாவின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை காவல் துறையினர், தற்கொலைக்கு முன்னதாக சௌமியா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் ஷேக் முகமது, அவரது பெற்றோர் மற்றும் திருப்பூரை சார்ந்த மாமா என்று எழுதி வைத்துள்ளார். மேலும், பல பரபரப்பு தகவலை எழுதி வைத்திருந்ததாகவும் தெரியவருகிறது. இந்த கடிதத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், தலைமறைவாக உள்ள ஷேக் உட்பட அனைவரையும் தேடி வருகின்றனர்.