தமிழகம் இந்தியா

7 பேர் விடுதலையில் ஆளுநரின் முடிவே இறுதியானது; உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Summary:

rajivghandhi murder case - 7 member release - suprem court

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அதன் பிறகு அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7பேரை விடுதலை செய்ய கூடாது என வெடி குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 peaople in jail for rajiv murder க்கான பட முடிவு 

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரிவாக நடந்து வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு. அவர் மட்டும் தான் இந்த வழக்கில் தீர்மானிக்கு உரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதன்மூலம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவுவெடுக்கும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்பதை நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஏழு பேரின் விடுதலை சாத்தியமாகும்.இனி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது இந்த உத்தரவின் மூலம் தெரியவந்துள்ளது.


Advertisement