அரசியல் தமிழகம்

திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

திராவிட முன்னேற்ற கழகத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், இந்த இரண்டு பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இதனையடுத்து திமுக பொருளாளர் பதவிக்காக டி.ஆர்.பாலு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல் திமுக பொதுச்செயலாளர் பதவிக்காக துரைமுருகன்  வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று மாலை, 4 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தவதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததை அடுத்து, இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுகவின் பொருளாளர் பதவி வகித்து வந்த துரைமுருகன், இன்று பொதுச்செயலாளர் போட்டியில் எதிர்வேட்பாளர் இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைப்போன்று டி.ஆர் பாலுவும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர்கள் இருவரின் வெற்றிக்கு கழகத்தினரும், கூட்டணி கட்சியினரும் பலத்த வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்." என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement