இந்தியா

இனி பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் அவ்வளவுதான்!. திடிக்கிடும் தகவல்கள்!.

Summary:

இனி பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் அவ்வளவுதான்!. திடிக்கிடும் தகவல்கள்!.

யதுபேதம் இன்றி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்.
என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு துரித நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

இந்த நிலையில், அப்படி பெண்களை அனுமதித்தால் பந்தள அரண்மனையில் உள்ள ஆபரணப்பெட்டியை ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்ப முடியாது என்று பந்தள மன்னர் எச்சிரக்கை விடுத்துள்ளார்.

சபரிமலையில் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், வயதுபேதமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மணையிலுள்ள ஆபரணபெட்டி சபரிமலை சந்நிதானம் வராது.
ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும்.
அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.

பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம் என அரசுக்கும் தேவஸ்தானத்திற்க்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்கள்..

மேலும் தீர்ப்பை கட்டாயமாக்கினால்
சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்கள்.


Advertisement