#RainAlert: 5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்பொகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

#RainAlert: 5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்பொகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!


Rain warning for 5 districts in tamilnadu

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திகுறிப்பில், கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசுக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.