தமிழகம்

வரப்போகுது மழை..! அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Summary:

Rain update for tamil nadu in next 24 hours

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தகவலின் படி, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தகாற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement