இரண்டு நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!



Rain Tamilnadu ALert

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

ஜூன் 22 மற்றும் 23-ம் தேதிகளில் வடதமிழ்நாடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வீசக்கூடும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு கர்நாடக கடலோரப் பகுதி, அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.