தமிழகம்

அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழை! அடுத்த இரண்டு நாட்களுக்கு 7 மாவட்டங்களில் கனமழை!

Summary:

rain in early morning


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரியில் பெய்துவருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப்பொழிவு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னையில் இன்று வேளச்சேரி, மேடவாக்கம், அடையார், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் திடீரென மழை பெய்தது.  

நீண்ட நேரம் பெய்த மழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அதிகாலையில் அலுவலகத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்த நிலையில், மழை நின்றதால் சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு‌மையம் தெரிவித்துள்ளது.


Advertisement