கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தை குளிரவைக்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தை குளிரவைக்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!



rain alert in tamilnadu

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகுறிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று திருப்பூர், நீலகிரி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை  பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

அதிகபட்ச வெப்பநிலையானது 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது. மீனவர்களுக்கான முன்னறிவிப்பில், தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.