தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!! 

தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!! 



rain alert in tamilnadu

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 20 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர். திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

21 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 21 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதியில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.