வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!


rain-alert-for-west-and-north-side

வெப்பச்சலனத்தின் காரணமாக இன்று மேற்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

rain

தொடர்ந்து நாளை மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வரும் மே 20 முதல் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.