அல்வா சாப்பிட்ட முதல்வருக்கு, மாஞ்சோலை மக்களை சந்திக்க மனமில்லையா? - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆதங்கம்.!



Puthiya Tamilagam Party Krishnasamy on MK Stalin Nellai Visit 

 

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், நெல்லை மாவட்டத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அம்மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அர்ப்பணித்த முதல்வர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், மக்களை நேரிலும் சந்தித்தார். நேற்று இரவு திடீரென திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கும் சென்று இருந்தார். 

இந்நிலையில், மாஞ்சோலையில் வசித்து வந்த மக்கள், நெல்லைக்கு வந்த முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்க காத்திருந்தனர். அப்போது, சில காரணத்தால் அவர்களை முதல்வர் சந்திக்க இயலவில்லை என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!

கிருஷ்ணசாமி விமர்சனம்

இந்த விஷயத்தை விமர்சித்து இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, "திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதல்வர் ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை" என தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருக்கிறார்.

 

இதையும் படிங்க: செயின் பறித்தவர், ஜாதி வெறியருக்கு தவெக மாவட்ட செயலாளர் பொறுப்பு? - நிர்வாகிகள் குமுறல்.!