தமிழகம்

தந்தை, மகனை வங்கியில் வைத்து பூட்டி சென்ற அதிகாரிகள்.. பகீர் சம்பவம்..!

Summary:

தந்தை, மகனை வங்கியில் வைத்து பூட்டி சென்ற அதிகாரிகள்.. பகீர் சம்பவம்..!

வங்கிக்கு சென்றிருந்த தந்தை - மகன், வங்கிக்குள் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் மீட்கப்பட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா, சுந்தீர் நகரில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு காவலாளி கூட கிடையாது என்றும் கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்களே பிரதான வங்கிக்கதவுகளை வீட்டிற்கு எடுத்து சென்று கொண்டு வருவது வழக்கம். 

நேற்று அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர், தனது 5 வயது மகனுடன் பணம் செலுத்த சென்றுள்ளார். நேற்று சனிக்கிழமை என்பதால் இறுதிக்கட்ட நேரத்தில் சென்று வங்கியில் பணம் செலுத்தியுள்ளனர். பின்னர், அவர்கள் சிறிது நேரம் வங்கிக்குள் ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், வங்கியில் பணிநேரம் முடிந்ததும் அதிகாரிகள் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்ற நிலையில், தந்தையும் - மகனும் வங்கிக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு தந்தை தகவலை தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 

வீட்டிற்கு சென்ற வங்கி அதிகாரிகள் சாவியுடன் அரக்கப்பரக்க வந்த நிலையில், 2 மணிநேரத்திற்கு பின்னர் தந்தை - மகன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு நிகழ்விடத்திலேயே மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இருவருக்கும் எந்த உடல்நல பிரச்சனையும் ஏற்படவில்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததைத்தொடர்ந்து, பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


Advertisement