தமிழகம்

ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன்.! ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்.!

Summary:

ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன்.! ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்.!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அஜித்குமார் என்ற இளைஞன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் அரசு நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 


Advertisement