புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை! காவல்துறையினர் விசாரணை!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி, நவரத்தின நகரை சேர்ந்தவர் 50 வயதுடைய பிரம்மன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள் வயது 47.
இவர்கள் இருவருக்கும் பாண்டி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரம்மனின் மகள் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். பாண்டியும் வேலைக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு, சுப்பம்மாள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். பிரம்மன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் பாண்டி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டிற்குள் சுப்பம்மாள் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் வெட்டுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி கத்தி கூச்சல் இட்டுள்ளார். அதன் பிறகு இவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்கள் சுப்பம்மாள் வெட்டுப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுப்பம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இதனை தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.