மதுபானம் ஊற்றிவிட்டு 2 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை.. புதுக்கோட்டையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!Pudukkottai Keeranur Man Sexual Abused 17 Aged Minor Girl

17 வயது சிறுமிக்கு மதுபானம் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசு அதிகாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரைச் சார்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் தெருவில் வசித்து வந்த கிராம நிர்வாக உதவியாளர் முருகேசன் (வயது 38) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். 

கூட்டு பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றிய இரண்டு காமுகன்களும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், இந்த விஷயம் தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 16 வயது சிறுவன் மற்றும் தலையாரி முருகேசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இருவரிடமும் நடைபெற்ற விசாரணையில் சிறுமிக்கு திட்டமிட்டு மதுபானம் வாங்கிக்கொடுத்த தலையாரி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுவனை உதவிக்கு அழைத்து அவனையும் அத்துமீற அனுமதி கொடுத்துள்ளார்.