வீட்டில் வைத்து நூதன விபச்சாரம்... புரோக்கர் கைது... இளம் பெண் மீட்பு.!prostitution-at-home-in-tiruchirapalli-broker-arrested

திருச்சி கேகே நகரில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்த வழக்கில்  வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கேகே நகரில் உள்ள உடையான் பட்டி பகுதியில் குடியிருப்பு வீட்டில் வைத்து விபச்சாரம் நடப்பதாக திருச்சி விபச்சார தடுப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிரடியாக சோதனையில் இறங்கிய காவல்துறையினர் அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர்.

tiruchirapalliஇதனைத் தொடர்ந்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த பெட்டைவாய்தலை பகுதியைச் சேர்ந்த  கார்த்திக்(37) என்ற புரோக்கரை கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

tiruchirapalliகுடியிருப்பு பகுதியில் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையை பொதுமக்கள் பாராட்டினர்.