தமிழகம் இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 277 பேர்!

Summary:

problem in flight

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்படுவதற்கு விமானம் தயாராக இருந்தது. அதில் 268 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் இருந்தனர். இந்தநிலையில், நடைமேடையில் இருந்து விமானத்தை ஓடுபாதைக்கு சிறிது தூரம் விமானி இயக்கியுள்ளார்.

அப்போது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமானி, இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து விமானத்தை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து விமானம் சரிசெய்யப்பட்டு இன்று காலை அந்த விமானம் தாய்லாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனையை விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து ஏதும் ஏற்படும் தவிர்க்கப்பட்டு 277 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 


Advertisement