தமிழகம் Covid-19

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி..! மகன் மற்றும் உதவியாளரும் பாதிப்பு..!

Summary:

Pramakuti ADMK MLA sathan prabakaran corono test positive

பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாதரண மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்த கொரோனாவால் பாதிக்கப்படும்நிலையில் பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டநிலையில்  அவரது மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 288 குணமடைந்துள்ளனர். 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 655 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Advertisement