தமிழகம்

மழையின் போது மின்தடையா? புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்!

Summary:

power cut complaint number

மழையின் போது ஏற்படும் மின்தடை தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண 1912 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. மாழையின்போது மின்தடை குறித்து பொதுமக்களின் புகார்கள் குறித்தும்,  மின்விபத்துகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மின்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். மழையின் போது ஏற்படும் மின்தடை தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண 1912 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் ‌044 - 24959525 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் போது மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


Advertisement