மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு சலுகையா? படுகுஷியில் பொதுமக்கள்!

மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு சலுகையா? படுகுஷியில் பொதுமக்கள்!


pongal offer for metro train


பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயிலில் 3 நாட்கள் பாதி கட்டண சலுகை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொது மக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

metro

இதற்குமுன்னர் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என  மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15 முதல் 17 வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.