BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பொங்கல் பரிசுத்தொகுப்பு கரும்பு கொள்முதல்; அரசின் கட்டுப்பாடுகளால் விவசாயிகள் கவலை..!
உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தைத்திருநாளை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களூக்கே அரசு சார்பில் பச்சரிசி, கரும்பு, ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் போன்ற பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் அரசு ரூபாய் ஆயிரம் பணம் மட்டும் வழங்குவதாக அறிவித்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் கரும்பு வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டது.

கரும்பு வழங்குவதற்கு என அரசு சார்பில் முடிவெடுத்துவிட்டதால், அதனை கொள்முதல் செய்ய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கரும்பு உயரம் ஆறடியாக இருக்க வேண்டும், சொத்தை இருக்கக் கூடாது, வயலுக்கு பட்டா-சிட்டா நகல்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டன.
கரும்பு விளைச்சலில் அனைத்து கரும்புகளும் ஆறு அடி இருக்காது. சில கரும்புகள் 5 அடி, 5.5 அடி அளவு கூட இருக்கும். அதே போல ஒரு விவசாயிடமிருந்து 5 முதல் 10 ஆயிரம் கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.